பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு

பெண் உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது

Update: 2023-08-18 01:19 GMT

சோழவந்தான், 

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பன்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அரிச்சந்திரன்(வயது 57). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தர்மருக்கும் முன் விரோதம் உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது தர்மர் மகன் முன்னாள் ராணுவ வீரரான ஜெகன்(36) அரிவாளால் அரிச்சந்திரன், அவரது மனைவி செல்வி, மைத்துனரான முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பால்பாண்டி ஆகியோரை வெட்டினாராம். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின்பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜூ, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்