சிற்ப தொழிலாளர்கள் மோதல்; வாலிபர் கைது
சிற்ப தொழிலாளர்கள் மோதல்; வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கைலாசநாதபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 44). நாச்சியார்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). சிற்ப தொழிலாளிகளான இருவரும், ஆலங்குடியில் உள்ள ஒரு கோவிலுக்கு சிற்ப வேலைக்காக வந்துள்ளனர். இருவரும் வேலை முடிந்ததும் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தி விட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். இதில் ரவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. சண்முகநாதனும் காயமடைந்தார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகநாதனை கைது செய்தனர்.