கட்டிட மேஸ்திரிக்கு கத்திக்குத்து; நண்பர் கைது

கிருஷ்ணகிரி அருகே கட்டிட மேஸ்திரியை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-01 15:41 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள குடுவானஅள்ளியை சேர்ந்தவர் செல்வம் (வயது 27). கட்டிட மேஸ்திரி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் பள்ளிகொண்டான் (30), சக்திவேல் (31). நண்பர்களான இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள மளிகை கடை முன்பு நின்று பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வத்தை குத்தினார். இதில் செல்வம் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கே.ஆர்.பி. டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்