வாட்டி வதைத்த வெயில்... திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை - மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்

சுமார் ஓரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது

Update: 2023-04-26 13:01 GMT

தென்காசி,

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.

சுமார் ஓரு மணி நேரத்துக்கும் மேலாக இடியுடன் கூடிய சூறாவளி காற்றுடன் கனமழை பெய்துள்ளது, வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் திடீரென கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்