தொழிலாளிக்கு கத்தரிக்கோல் குத்து

கீழப்பாவூர் அருகே தொழிலாளிக்கு கத்தரிக்கோல் குத்து;

Update: 2022-09-19 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் இல்லத்து பிள்ளைமார் கோவில் தெருவை சேர்ந்தவர் சாமி (வயது 33). கட்டிட தொழிலாளி.

அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் சாஸ்தா (36). இவரும் கட்டிட வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று இருவரும் கட்டிட வேலைக்கு சென்றனர். மாலையில் வீடு திரும்பும்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் சாமி கத்தரிக்கோலால் சாஸ்தாவை குத்தியுள்ளார். இதில் அவருக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்