ரூ.51 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அறிவியல் பூங்கா

மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ரூ.51 லட்சத்தில் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டது

Update: 2023-09-14 19:00 GMT




டாடாபாத்


கோவை டாடாபாத் அழகப்பா செட்டியார் சாலையில் அறிவியல் பூங்கா உள்ளது. இது சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கிடந்தது. இந்த பூங்கா நமக்குநாமே திட்டத்தில் ரூ.51 லட்சத்தில் கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது.


அங்கு அப்துல்கலாம் உருவச்சிலை, உலக உருண்டை, பெரிஸ்கோப் மாதிரி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரி, சந்திரயான்-3 மாதிரி, நியூட்டன் 3-வது விதி கருவிகள், பெல் டவர், மியூசிக்கல் டியூப், சோலார் சிஸ்டம், ஈர்ப்பு கருவிகள், மோபியஸ் இசைக்குழு, ஈரப்பதம் அளவிடும் கருவி, சூரிய குடும்பம், மழை அளவிடும் கருவி, உணர்வு சுவர் என்று அறிவியல் சிறப்பு அம்சங்கள் கொண்ட சாதனங்கள் வைக்கப்பட்டன.


இது மாணவர்களின் அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் உள்ளது. இந்த பூங்காவில் அறிவியல் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறுகையில், இந்த அறிவியல் பூங்கா காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் திறந்து இருக்கும். இதற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. அறிவியல் பூங்காவை மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறலாம் என்றார்.


மேலும் செய்திகள்