ரூ.51 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட அறிவியல் பூங்கா

கோவை டாடாபாத்தில் ரூ.51 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை, மாணவ-மாணவிகள் இலவசமாக பார்வையிடலாம்.;

Update: 2023-08-28 20:15 GMT

கோவை

கோவை டாடாபாத்தில் ரூ.51 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவை, மாணவ-மாணவிகள் இலவசமாக பார்வையிடலாம்.

அறிவியல் பூங்கா

கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கோவை டாடாபாத் அழகப்பா செட்டியார் சாலையில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு கடந்த மே மாதம் 8-ந்தேதி அமைச்சர் நேரு திறந்து வைத்தார். தற்போது நமக்குநாமே திட்டத்தில் கூடுதல் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி நவீன உபகரணங்களுடன் ரூ.51 லட்சத்தில் அறிவியல் பூங்கா மேம்படுத்தப்பட்டுள்ளது.

அப்துல்கலாம் உருவச்சிலை, உலக உருண்டை, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மாதிரி, சந்திராயன்-3 மாதிரி, நியூட்டன் 3-வது தத்துவ மாடல் கருவிகள், பெல் டவர், மியூசிக்கல் டியூப், சோலார் சிஸ்டம், உணர்வு சுவர் என்று மாணவ-மாணவிகள் வியந்து பார்க்கும் வகையிலும், அவர்களது அறிவியல் சிந்தனைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் இந்த அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது

இலவசமாக பார்வையிடலாம்

அறிவியல் பூங்கா காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரையும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது. நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. இந்த அறிவியல் பூங்காவை மாணவ-மாணவிகள் பார்வையிட்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்