அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
கூடலூர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.;
கூடலூர்,
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் அய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ-மாணவிகள் 200 பேர் கலந்துகொண்டனர். அவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. 6 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் இடையே நடத்தப்பட்ட போட்டியில் கூடலூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் முதல் பரிசு பெற்றனர். அறிவியலில் ஆர்வம் உள்ள மாணவ-மாணவிகளின் அறிவியல் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.