அறிவியல் கண்காட்சி

பொக்காபுரம் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.;

Update: 2023-03-15 18:45 GMT

கூடலூர், 

மசினகுடியை அடுத்த பொக்காபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவர்களின் படைப்புகள் இடம்பெற்ற அறிவியல் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி தலைமை தாங்கினார். மாணவர்களின் சிந்தனை, செயல்திறன், படைப்புத்திறனை வெளிக்கொணரும் வகையில் மாணவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளில் மேலும் புதுமையை புகுத்தி, திறமையை வளர்த்து எதிர்காலத்தில் சிறந்த விஞ்ஞானிகள உருவாகும் வகையில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என மாணவர்களிடம் தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்