அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம்

குடிமங்கலம் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.;

Update: 2022-11-14 18:32 GMT

குடிமங்கலம் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குடிமங்கலம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட சில கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

குடிமங்கலம் ஒன்றியம் பொன்னேரி ஊராட்சி சுண்டக்காம் பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

குடிமங்கலம் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.குடிமங்கலம் அருகே உள்ள சுண்டக்காம்பாளையம் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.

இந்த தொடக்கப்பள்ளியில் போதிய வடிகால் வசதி இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் மழைநீர் அதிகளவில் தேங்கியது. இதன் காரணமாக தேங்கியுள்ள மழை நீரில் பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளுக்கு நடந்து சென்று வருகின்றனர்.

சில நேரங்களில் மழைநீரில் வழுக்கி விழும் நிலையும் உள்ளது. நேற்று குடிமங்கலம் பகுதியில் மழை பெய்யாத நிலையிலும் மழை நீர் வற்றாமல் தேங்கியுள்ளது.

இங்கு மழைநீர் வடிவதற்கு போதிய வடிகால் வசதி இல்லை. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி மழைக்காலங்களில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்