ஜூன் 12-ல் பள்ளிகள் திறப்பு: சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் : அரசு போக்குவரத்து கழகம்

கோவை , மதுரை , நெல்லை , திருச்சி சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் .;

Update: 2023-06-09 11:09 GMT

சென்னை,

கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த ஆண்டு பள்ளிகள் திறப்பு 2 முறை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் வருகிற 12-ந்தேதி தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய நகரத்தில் இருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு650 பஸ்கள், மற்ற இடங்களுக்கு 850 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கோவை , மதுரை , நெல்லை , திருச்சி சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் .    

Tags:    

மேலும் செய்திகள்