மழை காரணமாக தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!
மழை காரணமாக தென்காசியில் 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 4-ந்தேதி நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று பல்வேறு இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக இன்று நீலகிரியில் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 4 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் அமிரித் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கடையம், கீழப்பாவூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.