கோகோ போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை

கோகோ போட்டியில் கீழஆம்பூர் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர்.;

Update: 2023-09-12 18:45 GMT

கடையம்:

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கான மாவட்டங்களுக்கு இடையிலான கோகோ விளையாட்டு போட்டி மதுரை சகோதயா பள்ளி குழுமத்தின் சார்பில் சங்கரன்கோவில் வேல்ஸ் பப்ளிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் கடையம் அருகே உள்ள கீழஆம்பூர் கேம்பிரிட்ஜ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ-மாணவிகள் 12, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அனைத்து போட்டிகளிலும் தகுதி பெற்றனர். மேலும் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட மாணவர்களும், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்ட மாணவிகளும் 2-ம் இடம் பெற்றனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளியின் சேர்மன் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனி மெட்டில்லா, தாளாளர் ஜோசப் லியாண்டர், பள்ளி முதல்வர் அமலா ஜூலியன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்