பள்ளி மாணவர்கள் சாதனை

பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;

Update: 2023-09-19 19:00 GMT

பாவூர்சத்திரம்:

தமிழ்நாடு அமெச்சூர் ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் அந்தோணி பள்ளியில் நடைபெற்றது. பல்வேறு வயது பிரிவுகளில் ரோலர் ரேஸ், ரிங் ரேஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் தென்காசி மாவட்டம் சார்பில் பாவூர்சத்திரம் வெஸ்டர்ன் காட்ஸ் இந்தியன் அகாடமி மாணவர்கள் 52 பேர் பங்கேற்று, 100-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த மாணவர்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

பரிசளிப்பு விழாவில் நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பள்ளி தாளாளர் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு பதக்கங்களை வழங்கினார்கள். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பயிற்சியாளர்கள் மாஸ்டர் கணேஷ், ராம்ராஜ், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.



Tags:    

மேலும் செய்திகள்