முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாடசாலை நிகழ்ச்சி
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் பாடசாலை நிகழ்ச்சி நடந்தது.;
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக பாடசாலை - கல்லூரி சோலை எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். சங்கர சுப்பிரமணியன் பெற்றோர்களை பேணிக் காப்பது குறித்து பேசினார். ஓய்வு பெற்ற கல்லூரி இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் சொற்பொழிவாற்றினார். ஆயிரக்கணக்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர்கள் சங்க முன்னாள் தலைவர் ராஜன் நன்றி கூறினார். பாடசாலையில் இருந்து கல்லூரி சோலைக்குள் தடம்பதிக்க வந்திருக்கும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நம்பிக்கை விதை விதைக்கும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.