பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி

Update: 2022-12-27 18:45 GMT

சின்னசேலம்

பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் சின்னசேலம் வட்டார வளமையம் சார்பில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்திராணி, ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண்மைக்குழு ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, துணை தலைவர் அன்புமணிமாறன் வாழ்த்துரை வழங்கினர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, கருத்தாளர் அரசு ஆகியோர் நம் ஊராட்சி, நம் பள்ளி, நம் பெருமை என்ற தலைப்பில் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள், குழந்தை பாதுகாப்பு குழு அரசாணை, பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகள், ஆசிரியர்களின் பாட போதனை மற்றும் கல்வியின் தரம் கண்காணிப்பு, கல்வியில் ஊராட்சியின் பொறுப்புகள், பள்ளியையும் ஊராட்சியையும் இணைக்கும் செயல் திட்டம் குறித்து பயிற்சி அளித்தனர். இதில் வட்டார கல்வி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்