பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்
பாபநாசத்தில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது.;
பாபநாசம்:
பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடந்தது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சிலர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்துலட்சுமி வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் தலைமை தாங்கி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார், இல்லம் தேடி கல்வி பொறுப்பாளர் கார்த்திகா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரமா, வளர்மதி, சித்ரா, அனுராதா, செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.