தொண்டி,
திருவாடானை யூனியன் பாண்டுகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி மேலாண்மை குழு தலைவி காளீஸ்வரி தலைமையில் நடைபெற்றது. கோடனூர் ஊராட்சி தலைவர் காந்தி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவியருக்கு உயர்கல்வி படிப்பதற்கான வழிகாட்டுதல் குறித்தும், 10,11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை, மாலை சிறப்பு வகுப்புகள் நடத்துவது,, 6,7,8,9-ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு சிறப்பு வாசிப்பு பயிற்சிகள் அளிப்பது, பள்ளிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி வேளாண்மை குழுவினர் கலந்து கொண்டனர்.