நூலகத்தை பார்வையிட்ட பள்ளி மாணவிகள்

நூலகத்தை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர்

Update: 2022-09-26 22:57 GMT

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் நூலகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நூல்கள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டும் வகையில், நூலகத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி மீனாட்சிபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் நூலகத்தை பார்வையிட்டனர். நூலகத்தில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது. பள்ளி ஆசிரியை சுப்புலட்சுமி மாணவிகளிடம் பள்ளி நூலகத்தை பயன்படுத்துவது போல் விடுமுறை நாட்களில் தங்கள் பகுதியில் உள்ள நூலகத்தையும் பயன்படுத்த வேண்டும் என அறிவுரை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்