பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

கம்பத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-16 18:45 GMT

கம்பம் வட்டார வளமையம் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சி கம்பம் ஆங்கூர்ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சுகதேவ் தலைமை தாங்கினார். கம்பம் வட்டார மேற்பார்வையாளர் (ெபாறுப்பு) பாரதராணி முன்னிலை வகித்தார். இந்த ஊர்வலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான தனிநபர் கல்வித்திட்டம், மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளி சேர்ப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தி மாணவிகள் கோஷமிட்டபடி சென்றனர். ஊர்வலம் பார்க்ரோடு, மெயின்ரோடு வழியாக வந்து மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது.

இதேபோல் கம்பம் நகராட்சி முகைதீன் ஆண்டவர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆரோக்கியம்மாள் தலைமையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவிகள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்