பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்
தஞ்சை பகுதியை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் தஞ்சையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் தந்தைக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வழக்கம்போல மதுகுடித்து விட்டு வந்த மாணவியின் தந்தை வீட்டில் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து சமாதானம் பேசுவதற்காக அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் தஞ்சை கீழவாசல் பகுதியை சேர்ந்த முகமது உஸ்மான் (வயது 39) என்பவர் வந்துள்ளார். பின்னர் அவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் முகமது உஸ்மான்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.