பள்ளி மாணவி மாயம்
சின்னசேலம் அருகே மாயமான பள்ளி மாணவியை போலீசாா் தேடி வருகின்றனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயதுடைய மாணவி. இவர் மேல்நாரியப்பனூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு, வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவி்ல்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.