ஆம்பூர் அருகே சின்னபள்ளிகுப்பம் பகுதியில் இலங்கை தமிழ் வாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள கூலி தொழிலாளியின் 14 வயது மகள் அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற மாணவி பின்னர் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். அவர் கிடைக்காததால் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.