பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தென்காசியில் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-09 18:45 GMT

தென்காசி அருகே உள்ள இலஞ்சியைச் சேர்ந்தவர் புதியவன். இவர் தற்போது தென்காசி கே.ஆர்.காலனியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவரது மகள் தர்ணிகா (வயது 15). தென்காசி மஞ்சம்மாள் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முடித்து 10-ம் வகுப்பிற்கு செல்ல இருந்தார்.

இந்தநிலையில் தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவி அதிக நேரம் தூங்குவதாகவும், இதனை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை சுமார் 11 மணிக்கு அவரது தாய் மீண்டும் மாணவியை திட்டினாராம். இதனால் வேதனை அடைந்த மாணவி தர்ணிகா தனது துப்பட்டாவால் வீட்டின் மேற்பகுதியில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்