பள்ளிக்கூட வகுப்பறை சீரமைக்கும் பணி
நெல்லை தச்சநல்லூரில் பள்ளிக்கூட வகுப்பறை சீரமைக்கும் பணி நடந்தது.;
பேட்டை:
நெல்லை தச்சநல்லூர் 1-வது வார்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேதமடைந்த வகுப்பறைகளை ரூ.30 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடங்கியது. நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியை சங்கரேஸ்வரி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ரேவதி பிரபு, மாநகராட்சி கவுன்சிலர் சங்கர், மாநகராட்சி துணை ஆணையாளர் வெங்கட்ராமன், செயற்பொறியாளர் லெனின், உதவி செயற்பொறியாளர் ஜெய்கணபதி, தி.மு.க. வட்ட செயலாளர்கள் பால்கட்டளை முருகன், ராஜ், மாநகர பிரதிநிதி பால் இசக்கி, வட்ட பிரதிநிதிகள் நெல்லையப்பன், திருவடி, துணை செயலாளர் ஹரிராம், 14-வது வார்டு ராசையா, தி.மு.க. பிரமுகர்கள் சீனி, முத்து ரங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.