பள்ளி ஆண்டு விழா

சுரண்டையில் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.;

Update:2023-03-26 00:15 IST

சுரண்டை:

சுரண்டை ராஜேந்திரா விஸ்டம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் 12-வது ஆண்டு விழா மற்றும் மழலையர்களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. குழழ்வாய்மொழி அம்மாள் சிவநாடார் அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவனத்தின் நிறுவனர் சிவபபிஸ்ராம், செயலர் சிவடிப்ஜினிஸ்ராம், தலைமை ஆசிரியர் முருகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பொன்மனோன்யா குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். மாணவி ஜெசிகா வரவேற்றார். வில்லுப்பாட்டு, சிவ தாண்டவம், மாறுவேடப்போட்டி, விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாடகம், பட்டிமன்றம் மற்றும் மாணவர்களின் நடனம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு விருந்தினராக டிரசர் ஐலண்ட் பள்ளியின் முதல்வர் சமீமா பர்வின் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு கல்வியில் முதலிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். முடிவில் மாணவர் ஜெகதீஷ் நன்றி கூறினார். மாணவிகள் ஆதர்சனா, அஸ்விதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியைகள் பிரதீபா, ஈஸ்வரி ஆகியோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்