சிவகிரி:
சிவகிரி பஸ்நிலையம் அருகே அமைந்துள்ள விவேகா ஆங்கில மேல்நிலைப் பள்ளியின் 48-வது ஆண்டு விழா, விளையாட்டு போட்டி, கட்டுரைப் போட்டி, பரிசளிப்பு விழா போன்றவை நடைபெற்றன. சிவகிரி பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து பெற்றோருக்கான விளையாட்டு போட்டி மற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடகோபு தலைமை தாங்கினார். சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேலு முன்னிலை வகித்தார். விவேகா பள்ளியின் முதல்வர் முருகேசன் வரவேற்றார். சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவியர்களுக்கு வெள்ளி குத்துவிளக்கு மற்றும் வெற்றிகோப்பைகளை பரிசாக வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். பால விநாயகர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தமிழ் துறை தலைவர் (புளியங்குடி) ராமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பொறுப்பாசிரியர் தங்கேஸ்வரன் நன்றி கூறினார்.