872 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

கீழக்கரையில் கே.நவாஸ்கனி எம்.பி. சொந்த நிதியில் 872 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.;

Update:2023-10-22 00:15 IST

கல்வி உதவித்தொகை

ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ேக.நவாஸ்கனி எம்.பி. சொந்த நிதியில் இருந்து 872 மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள பி.எஸ்.எம். கிராண்ட் பேலஸ் மகாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 872 மாணவர்களுக்கு சுமார்ரூ. 1 கோடியே 74 லட்சம் மதிப்பிலான உயர்கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து 5 ஆண்டுகள் எம்.பி. நவாஸ்கனி சொந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 3500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நவாஸ் கனி எம்.பி.யின் சொந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

தற்போது 5-வது ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமை தாங்கினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் செ.முருகேசன்(பரமக்குடி), கருமாணிக்கம்(திருவாடானை), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜகான், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி. மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி கல்வி உதவித் தொகையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், நிர்வாகிகள், பள்ளி கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்