எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தலித் கிறிஸ்தவர்கள் பேரணி

எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தலித் கிறிஸ்தவர்கள் பேரணி சென்றனர்.

Update: 2023-08-11 00:00 GMT


கோவை


தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி கைகளில் கருப்பு கொடி ஏந்தி பேரணி நடந்தது. பேரணியை கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தொடங்கி வைத்து நடந்து சென்றார். இந்த பேரணி டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் தொடங்கி மறை மாவட்ட ஆயர் இல்லம் வரை சென்று நிறைவடைந்தது.


இதுகுறித்து பேரணியில் சென்றவர்கள் கூறும்போது, தலித் கிறிஸ்த வர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி கடந்த சில ஆண்டுக ளாக ஆகஸ்டு மாதம் 10-ந் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அதன்படி நேற்று கையில் கருப்பு கொடி ஏந்தி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது என்றனர்.


இதில் மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப், பொருளாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்