சவுரிராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-14 18:45 GMT

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தெப்ப உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசி மகவிழா

திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசி மக பெருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவையொட்டி தங்க பல்லக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

தெப்ப உற்சவம்

தொடர்ந்து தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடந்தது.

முன்னதாக பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி நாச்சியார்களுடன், சவுரிராஜ பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார்.

3 முறை வலம் வந்தது

கோவிலின் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாதஸ்வர இசை நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்