அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர் சத்தியவாணி முத்து - முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு
சென்னை அடையாறில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.;
சென்னை,
சென்னை அடையாறில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் திமுக மகளிர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் சத்தியவாணி முத்து நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
திமுகவின் பெண்சிங்கமாக வாழ்ந்தவர் சத்தியவாணி முத்து. அரசியலுக்கு வரும் பெண்களுக்கு வழி காட்டியாக திகழ்ந்தவர். அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி ஆணைய தலைவராக சத்தியவாணி முத்துவை, கருணாநிதி பரிந்துரைத்திருந்தார். ஆனால் அப்போது ஆட்சி கலைக்கப்பட்டதால் அது நிறைவேற்றவில்லை.
போராட்ட குணம், தியாக உணர்வு, அசைக்க முடியாத கொள்கை பற்றும் கொண்டவராக இறுதி மூச்சுவரை இருந்த காரணத்தினால் சத்தியவாணி முத்து இன்றைக்கும் போற்றப்படுகிறார்.
இவ்வாறு கூறினார்.