சாத்தான்குளம் பேரூராட்சியில்சிறுவர் பூங்கா திறப்பு:ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. பங்கேற்பு
சாத்தான்குளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்காவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;
தட்டார்மடம்:
சாத்தான்குளத்தில் ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காளை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
பூங்கா திறப்பு
சாத்தான்குளம் பேரூராட்சி 9-வது வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்காவை ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஸ்டெல்லா பாய் தலைமை தாங்கினார். சாத்தான்குளம் தாசில்தார் ரதிகலா முன்னிலை வகித்தார். தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சங்கர், பேரூராட்சி துணைத்தலைவர் மாரியம்மாள், தி.மு.க. நகர செயலாளர் மகா இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசூர்
மேலும், சாத்தான்குளம் யூனியன் அரசூர் ஊராட்சியில் முதல்-அமைச்சரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ஆனந்தவிளை - பனைவிளை வரை ரூ.37 லட்சத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணி, ரூ.49 லட்சத்தில் தேரிவிளையில் தார்ச்சாலை அமைக்கும் பணி, ரூ.35½ லட்சத்தில் பெத்தலகேமில் தார்ச்சாலை அமைக்க பணி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசூர் ஊராட்சித் தலைவர் தினேஷ் ராஜசிங் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையர் சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பசாமி, தாசில்தார் ரதிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலர் பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கலெக்டரிடம் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜூவுக்கு, எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் செல்லும் சாலை ஓரத்திலும், ஏரலில் இருந்து ஆறுமுகமங்கலம் செல்லும் சாலை ஓரத்திலும், ஸ்ரீவைகுண்டம் அருகே சுப்பிரமணியபுரம் ஆற்றங்கரையோரம் மற்றும் கோவங்காடு ஊரிலும் நேற்று முன்தினம் நடந்த தீ விபத்தில் தென்னை, பனை மரங்கள் மற்றும் வாழைகள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளன. இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு உடனடியாக நிவாரணம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும்' என கூறியுள்ளார்.