சர்தார் வேதரத்தினம், வைரப்பனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்

சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், வைரப்பனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மருத்துவர் சமுதாய நல சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-07-04 14:02 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய நலசங்கத்தின் நகர, கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு நகர தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் சக்கரடீஸ் வரவேற்றார். சுதந்திர போராட்ட தியாகி வைரப்பன் மகன் சண்முகம், அவைத்தலைவர் அன்பழகன், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வேதரத்தினம், மயில்வாகனம், ரவி, சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுதந்திர போராட்டத்தில் பங்குபெற்று ஆங்கில போலீஸ்காரருக்கு முகச்சவரம் செய்ய மறுத்து 6 மாதம் சிறைதண்டனை பெற்ற சுதந்திர போராட்ட தியாகி வைரப்பனின் புகைபடத்தை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெருமைபடுத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவிப்பது. வேதாமிர்த ஏரியில் ரூ.10 கோடி செலவில் சுற்றுச்சுவர் அமைத்து நடைபயிற்சி மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த ஏரியின் மேல்கரையில் வாழ்ந்து மறைந்த சுதந்திர போராட்ட தியாகி வைரப்பன் நினைவாக அவரது பெயர் சூட்ட வேண்டும் சுதந்திர போராட்ட தியாகிகள் சர்தார் வேதரத்தினம், வைரப்பன் ஆகியோருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் பொருளாளர் சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்