இட்டமொழி:
பரப்பாடியில், தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இலங்குளம் பஞ்சாயத்து தலைவரும், தி.மு.க. பிரமுகருமான வி.இஸ்ரவேல் பிரபாகரன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கினார். மேலும் 200 பெண்களுக்கு இலவசமாக சேலைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நாங்குநேரி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின், தி.மு.க. நிர்வாகி சேகர், பஞ்சாயத்து துணைத்தலைவர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.