பிம்பலூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி
பிம்பலூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பிம்பலூர் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், பசுமை தமிழ்நாடு இயக்கத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து வனப்பகுதிகளில் மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வைக்கவும், வனப்பரப்புகளை அதிகரிக்க செய்யவும் உத்தரவிட்டார். அதன்படி பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உதவியுடன் அதிகளவில் மரக்கன்றுகள் நடப்படுகிறது என கூறினார். இந்தநிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குகனேஷ், வனச்சரகர்கள் பழனிகுமார், முருகானந்தம், பிம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.