முத்துப்பேட்டை சதுப்பு நிலப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முத்துப்பேட்டை சதுப்பு நிலப்பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை சதுப்பு நிலப்பகுதியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அலையாத்தி காடுகள் வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வன அலுவலர் அறிவொளி, முத்துப்பேட்டை வனசரகர் ஜனனி, முத்துப்பேட்டை தாசில்தார் மகேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.