பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.;

Update: 2022-06-18 14:56 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள அகிலாண்டபுரம் மகாலட்சுமி நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளிக்கு வந்த மாணவ- மாணவிகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சி தலைமை ஆசிரியை அமராவதி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் சந்திரசேகர் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் அகிலாண்டபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் பால்ராஜ், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்