மரக்கன்றுகள் நடும் விழா
உளுந்தூர்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் விழா மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்;
உளுந்தூர்பேட்டை
முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரளி கிராமத்தின் சாலை ஓரத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்ட பொறியாளர் முரளி தலைமை தாங்கினார். உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார், உதவி பொறியாளர் ராகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருநாவலூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன் வரவேற்றார். உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினருமான மணிக்கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.