சிவகிரி நீதிமன்றத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
சிவிகிரி நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சிவகிரி:
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சிவகிரி மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நீதிபதி ஜெய் காளீஸ்வரி தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டினார். தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். சுமார் 100 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
சிவகிரி வனச்சரகர் மவுனிகா, வனவர்கள் அசோக்குமார், அஜித்குமார், சிவகிரி நீதிமன்ற தலைமை எழுத்தர் கலாமணி, அரசு வக்கீல் பேட்ரிக் பாபு, வக்கீல் சங்க தலைவர் சக்கரவர்த்தி, செயலாளர் ராஜேந்திர பூபதி, பொருளாளர் செந்தில்குமார், வக்கீல்கள் யோகராஜ், தெய்வகுமார், முத்துகுமாரசாமி, செந்தில் திருமலைகுமார், சின்னத்தம்பி, சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.