மரக்கன்று நடும் விழா

ஆழ்வார்குறிச்சி அருகே செட்டிகுளத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

Update: 2022-11-29 18:45 GMT

கடையம்:

ஆழ்வார்குறிச்சி பரம கல்யாணி மேல்நிலைப்பள்ளி, கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுமை உலகம் மரம் வளர் அமைப்பு இணைந்து செட்டிகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடத்தியது. இதையொட்டி 5-ம்நாள் நிகழ்ச்சியில் செட்டிகுளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்று நடும் விழாவுக்கு பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளிச் செயலர் சுந்தரம் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியரும், பசுமை உலகம் மரம் வளர் அமைப்பின் பொறுப்பாளருமான நல்லாசிரியர் மாடசாமி முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சேகர் வரவேற்றார். ஓய்வு ஆசிரியர் ஆறுமுகம், ஐ.எல்.பி. ஒருங்கிணைப்பாளர் பாப்பு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சுற்றுச்சூழல் ஆர்வலர் என்ஜினீயர் சுரேஷ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். சமூக ஆர்வலர் முத்துக்குமார் மற்றும் நல்லாசிரியர் மாடசாமி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர்கள் முத்துவேலன், பாலசுப்பிரமணியன் மற்றும் பள்ளி தாளாளர் சித்திக், தேவேந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திட்ட அலுவலர் சங்கரநாராயணன் நன்றி கூறினார். ஓவிய ஆசிரியர் விக்னேஷ் தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்