மரக்கன்றுகள் நடும் விழா
திருச்செந்தூர் யூனியனில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் யூனியன் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாகவும், காலநிலை மாற்றத்தை வலியுறுத்தியும், பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாக 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் தலைமை தாங்கினார். யூனியன் ஆணையர் ஆன்றோ, வட்டார வளர்ச்சி அலுவலர் பொங்கலரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் யூனியன் தலைவர் செல்வி வடமலைபாண்டியன், ஒன்றியக்குழு துணை தலைவர் ரெஜிபர்ட் ஆகியோர் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் வாசுகி, ராமலட்சுமி, செல்வன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அமுதா, பழநி கார்த்திகேயன், பொறியாளர் பிரேம் சந்தர், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தனலட்சுமி, முத்துப்பாண்டி, பனையூர் வின்ஸ்டன், முருகேஸ்வரி, சங்கீதா, மதுரிதா சந்திரசேகரன், சிகரம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (நிர்வாகம்) வாவாஜி செய்திருந்தார்.