பேட்டை:
எனது மண், எனது தேசம் என்ற இயக்கத்தின் கீழ் நெல்லையில் நேரு யுவகேந்திரா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் ம.தி.தா. இந்து கல்லூரி ஆகியவை இணைந்து பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியில் மரக்கன்று நடும் விழாவை நடத்தியது. கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் மற்றும் மத்திய அரசின் கள விளம்பர அலுவலர் கோபுகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மரம் நடும் அவசியம் குறித்து விளக்கம் அளித்து பேசினர். தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டினர். முன்னதாக போதை பொருள் தடுப்பு உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி சுயநிதி பிரிவு துணை இயக்குனர்கள் சர்மிளா கொரரே, திரவியம், நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பிச்சம்மாள் உள்பட பலர் கலந்து கொண்னடர். நேரு யுவகேந்திரா நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கர் நன்றி கூறினார்.