மரக்கன்று நடும் விழா
சிவகிரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அரசு மருத்துவமனையில் சிவகிரி தேர்வு நிலை பேரூராட்சி சார்பாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். நிர்வாக அதிகாரி வெங்கடகோபு, துணைத் தலைவர் லட்சுமி ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்திலும் சுற்றுப்புற பகுதிகளிலும் சிவகிரி தாசில்தார் ஆனந்த், புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு அசோக், சிவகிரி வனத்துறை ரேஞ்சர் மவுனிகா, சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சிவகிரி அரசு மருத்துவமனை டாக்டர் ராம் சுபாஷினி, சித்தா மருத்துவ டாக்டர் ஜெயந்தி, வனத்துறை வனவர் அசோக்குமார் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மரக்கன்றுகள் நட்டினர்.
நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் பால சுப்ரமணியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுந்தர வடிவேலு, தேர்வு நிலை பேரூராட்சியின் தலைமை எழுத்தர் தங்கராஜ், சித்தா மருந்து ஆளுநர் தனகேஸ்வரி மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைத்து கவுன்சிலர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் சித்த மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது.