தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் எதிரொலி: குப்பைகளை அகற்றிய ஊராட்சி தலைவர்

தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக குப்பைகளை அகற்றிய ஊராட்சி தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2023-10-22 18:30 GMT

கந்தர்வகோட்டை ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இங்கு 12 தற்காலிக தூய்மை பணியாளர்களும், ஒரு நிரந்த பணியாளரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக தூய்மை பணியாளர்கள் தங்களுடைய பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் துணை தலைவர் வெங்கடேசன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு நகரில் உள்ள அனைத்து வீதிகளிலும் இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களின் இந்த செயலை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்