தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக ஆர்ப்பாட்டம்

நெல்லையில் தூய்மை பணியாளர்கள் நேற்று 3-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-18 19:13 GMT

சுய உதவி குழுக்களின் கீழ் பணிபுரியும் நெல்லை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 753 பேரை ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைப்பதை கண்டித்தும், தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த கோரியும் தூய்மை பணியாளர்கள் கடந்த 16-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து 2-வது நாளான நேற்று முன்தினம் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று மேலப்பாளையம் சந்தை முக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட பொதுச் செயலாளர் குழந்தைவேலு தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பீடி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கே.மாரிசெல்வம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மரிய ஜான் ரோஸ், சுமை தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் முத்துமணிகண்டன், ஏ.டி.சி. தொழிலாளர் சங்க பொருளாளர் விநாயகம், கவுன்சிலர் முத்துசுப்பிரமணியன் மற்றும் சி.ஐ.டி.யு. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்