தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் தொட்டி ஆபரேட்டர், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர் மற்றும் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார், மாவட்ட செயலாளர் முருகேசன், கடவூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலைவகித்தனர். தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் ஊதிய வழங்க வேண்டும், ஊதியம் ரூ.9 ஆயிரமாக நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பர் கலந்து கொண்டனர்.