அழகிய கூத்தர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு
கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் சனிப்பிரதோஷ வழிபாடு நடந்தது.
தட்டார்மடம்:
பேய்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி நேற்று மாலையில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அழகிய கூத்தர்-சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
மேலும் வளாகத்தில் அமைந்துள்ள நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.