நாகையில் விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி வழிபாடு - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாகையில் உள்ள விநாயகர் கோவில்களில் சங்கடகர சதுர்த்தி பூஜை நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-15 14:06 GMT

வெளிப்பாளையம்,

நாகை பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் இன்று மஹா சங்கடஹர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக நாகை காயாரோகண சாமி கோவில் முகப்பில் உள்ள நாகாபரண விநாயகருக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, தேன்,பால், இளநீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல் ஏழைப் பிள்ளையார் கோவில், நடுக்கம் தீர்த்த விநாயகர் கோவில், நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள செங்கழுநீர் விநாயகர், விட்டவாசல் விநாயகர், மாவடி பிள்ளையார், நீலா மேல வீதியில் உள்ள சாபம் தீர்த்த விநாயகர், நாகூர் விருச்சிக விநாயகர், காடம்பாடி சாலமன் தோட்டத்தில் உள்ள செல்வ விநாயகர், மறைமலைநகரில் உள்ள நவசக்தி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்றன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்