சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-04-10 19:30 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு கன்னி மூலையில் வீற்றிருக்கும் விநாயக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், விநாயக பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகப்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. விநாயகர் அகவல் உள்ளிட்ட பல்வேறு பதிகங்கள் பாடப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்