அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவர் கைது
திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.;
திருவையாறு;
திருவையாறு அருகே உள்ள அள்ளுரை சேர்ந்தவர் நாகராஜ் மகன் ரஞ்சித் (வயது28). இவர் மோட்டார் சைக்கிளில் அள்ளுர் வெண்ணாற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணல் மூட்டைகளை ஏற்றி வந்தார். அப்போது அள்ளுர் மெயின்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நடுக்காவேரி போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. உடனே மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த நடுக்காவேரி போலீசார் ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.